எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் குப்பைகளை சேகரிக்கும் செயற்பாடு நிறுத்தம்!

Date:

இலங்கையின் வர்த்தக தலைநகராக இருக்கும் கொழும்பில் சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குப்பை சேகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.டி. இக்பால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், குப்பை சேகரிப்பு லொரிகளுக்கு தேவையான எரிபொருள் இன்மை காரணமாக சில பகுதிகளில் குப்பை சேகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நகரின் குப்பைகளை சேகரிப்பதற்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் எங்கிருந்தோ டீசலை கொண்டு வந்து குப்பைகளை எடுக்க வேண்டும் என்று கொழும்பு மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் ராஜு பாஸ்கர் வலியுறுத்தினார்.

இதேவேளை இந்த மாத தொடக்கத்தில் இதே பிரச்சினையால் நகரம் பாதிக்கப்பட்டது.

குறித்த குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான பெற்றோல் இன்மை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் இக்பால் தெரிவித்துள்ளார்.

‘ தேவையான பெற்றோல் எமக்கு கிடைக்காமையின் காரணமாக கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்டபகுதியில் குப்பைகளை அகற்றுவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டது.

நேற்றைய தினம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் தேவையான பெற்றோல் கிடைக்கப்பெறறது.

எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் கொழும்பு நகரில் தேங்கி கிடக்கின்ற குப்பைகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’

‘டீசல் பெற்றோல் நெருக்கடி காரணமாக கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்ட சில பகுதிகளில் ஓரிரு நாள் குப்பை அகற்றும் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமல் போனது.

வெள்ளவத்தை கொள்ளுபிட்டி மற்றும் பம்பலபிட்டி ஆகிய பகுதிகளில் ஒரு நாளும் மற்றைய நாள் கோட்டை பகுதியில் குப்பைகளை அகற்ற முடியாது போனது.

குறித்த சிக்கல் நிலையின் காரணமாக நகரின் குப்பைகள் இரு நாட்கள் மாத்திரமே ஆகற்ற முடியாது போனது. ஆனால் தற்போது அவ்வாறான ஒரு சிக்கல் நிலையில்லை.

நாங்கள் நகரின் குப்பைகளை சேகரிப்பதற்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர்கள் டீசல் இல்லை என தெரிவித்து குப்பைகளை அகற்றாமல் இருக்க முடியாது. குப்பைகளை அகற்றியே ஆக வேண்டும் அதற்காக தான் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...