94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பமாகியுள்ளது.
இம்முறை நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் வில் சுமித் சிறந்த நடிகருக்கான விருதை வெற்றிக் கொண்டுள்ளார். எனினும், இந்த முறை நிகழ்வில் யாரும் எதிர்பாராத சம்பவமொன்று நேர்ந்துள்ளது.
ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வை தொகுத்து வழங்கிய தொகுப்பாளரின் கன்னத்தில் வில் சுமித் அரைந்துள்ளமை எவருமே எதிர்பார்க்காத சம்பவமாக இருந்தது.
தொகுப்பாளர் வில் சுமித்தின் மனைவி தொடர்பில் கருத்து வெளியிட்ட நிலையிலேயே வில் சுமித் தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்துள்ளார். வில் சுமித்தின் மனைவிக்கு ஏற்பட்டுள்ள நோய் காரணமாக அவர் தலையிலுள்ள முடி கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தொகுப்பாளர் வில் சுமித்தின் மனைவியை தொடர்ச்சியாக கேலி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்து தொகுப்பாளர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தருணத்தில் மேடைக்கு ஏறிய வில் சுமித் திடீரென தொகுப்பாளரை அரைந்துள்ளார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் வில் சுமித் பின்னர் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும் விருது வழங்கும் நிகழ்வில் வில் சுமித் செய்தது சரிதான் என்றும், வில் சுமித் மன்னிப்பு கோர தேவை இல்லை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.