கடந்த அரசாங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையை பின்பற்றத் தவறிவிட்டன: நாலக கொடஹேவா

Date:

கடந்த கால அரசாங்கங்கள் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளை பின்பற்றவில்லை என நகர அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா குற்றம்சாட்டியுள்ளார்.

அதனால் தான், நாடு மீண்டும் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தை அணுக வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் முன்னைய அரசாங்கங்கள் எப்பொழுதும் சர்வதேச நாணய நிதியத்தை நம்பியிருக்கவும், 16 தடவைகளுக்கு மேல் நிவாரணத்திற்காக மீண்டும் மீண்டும் நாணய நிதியத்தை அணுகவும் காரணம். நாணய நிதியம் வழங்கிய சரியான ஆலோசனையை அரசாங்கங்கள் ஒருபோதும் பின்பற்றாததுதான்.

சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது ஒரு மோசமான யோசனையா? என்று மேலும் கேள்வி எழுப்பப்பட்டபோது, தனிப்பட்ட முறையில் தாம் அப்படி நினைக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.

நாணய நிதியத்தை அணுகுவது ஒரு மோசமான விஷயம் அல்ல என்று நான் உணர்கிறேன். ஒருவேளை அவர்களின் முன்மொழிவுகளும் எங்கள் ஜனாதிபதியுடன் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்.

நாணய நிதியம் வழங்கிய அறிவுரைகளில் குறைந்தது 60வீதத்தை அரசாங்கம் பின்பற்றினால், நாம் எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண்போம்.

ஆலோசனையைப் பின்பற்றுவது 100வீதம் கடினமாக இருக்கும், ஆனால் சில விஷயங்களை உற்பத்தி செய்ய முடியும். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி பற்றி அனைவரும் பேசுவதை நாம் காண்கிறோம்.

ஆனால் மக்கள் தீர்வுகளை கொண்டு வருவதை நாம் காணவில்லை. உதாரணமாக, இலங்கையின் வரிகள் மிகக் குறைவு, இந்த விகிதத்தில் நாம் ஒரு நாட்டை நடத்த முடியாது. சர்வதேச நாணய நிதியமும் அதையே அறிவுறுத்தும்,’ என்றார்.

மேலும், தற்போது நாட்டில் பொருளாதார அமைப்பில் எதிர்கொள்ளும் ‘கட்டமைப்பு பிரச்சினைகள்’ பற்றி குறிப்பிடுகையில்,

நாணய நிதியம் மற்றும் நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் கட்டமைப்பு ரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும், திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் எப்போதும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதைத்தான் நாம் பேச வேண்டுமஉதாரணமாக, கடன்கள், கடன் மறுசீரமைப்பு, வர்த்தகம் மற்றும் வரிகள். இவை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டும், ‘என்று அவர் கூறினார்.

இதேவேளை எரிவாயு மற்றும் எரிபொருளின் தட்டுப்பாட்டுக்கான பிரதான காரணம் டொலர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் இவற்றில் எவற்றிலும் குறைவானது முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் கடந்த 2 ஆண்டுகளாக இருக்கவில்லை. இது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது, இது தற்;போது தொற்றுநோய்களுடன் சேர்ந்து பெரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்றுநோய் தொடங்கிய 2020 இல் அரசாங்கம் நாணய நிதியத்தை அணுகியிருந்தால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பது எளிதாக இருந்திருக்குமா என்று கேட்கப்பட்டபோது, எந்த வகையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.

‘2020 இல் உள்ள பிரச்சினைகள் மற்றும் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறானவை,

2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் நாணய நிதியத்தை அணுகினால் அது ஒரு பொருளாதார நெருக்கடி குறைவாக இருந்திருக்கும் என்று என்னால் கூற முடியாது, ஏனெனில் நாணய நிதியம் தீர்வுகளையும் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் ஆலோசனைகளையும் வழங்குகிறது, ‘என்று டாக்டர் கொடஹேவா கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பொதுமக்களுக்கு முழுமையாக தெரியப்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும், உண்மையை அறிவது மக்களின் உரிமை என்றும், மக்கள் நிலைமையை நன்கு புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...