கல்பிட்டியில் எரிபொருளை வீணடிக்கும் செயலான சைக்கிள் மற்றும் வாகன பேரணி – தொடர்பாக பதிலளித்த நாமல்!

Date:

NEWSNOW |- கொழும்பு – புத்தளம் வீதியில் நேற்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – வாகன பேரணியின் பின்னணியில் தாம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

“இன்று கல்பிட்டியில் நடைபெற்ற சைக்கிள் – வாகன பேரணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களால் எந்த உதவியும் செய்யப்படவில்லை. விளையாட்டு அமைச்சுடன் தொடர்பில்லாத தனியார் நிறுவனத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என விளையாட்டுத்துறை அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியானது, நாட்டின் நிலைமைய கருத்தில் கொள்ளாமல், அபாயகரமான வாகனங்களை ஓட்டியதாகவும், எரிபொருளை வீணடிப்பதாகவும் குற்றம் சுமத்தி பொதுமக்களின் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டது.

மேலும் இது ஒரு தொண்டு நிறுவனத்தின் நன்கொடையின் ஒரு பகுதியாக இந்த பேரணியை ஏற்பாடு செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...