காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினருக்கு மரணச் சான்றிதழுடன் கொடுப்பனவு: அமைச்சரவை தீர்மானம்

Date:

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ்கள் மற்றும் 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்து காணாமல் தொடர்ந்தும் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இழப்பீட்டுக்கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய பல்வேறு நிலைமைகளின் கீழ் ஏற்பட்ட தொந்தரவுகளால் அழுத்தங்களுக்குள்ளாகிய பிரஜைகளுக்கு அவர்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்காகவும் மற்றும் மீள் நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பதற்காகவும் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்கால சந்ததியினர் உள்ளிட்ட இலங்கையர்களின் நலன், மற்றும் பாதுகாப்பு, நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தற்போது வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கமைய அக்குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது.

அதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க காணாமல் போன் ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போன நபர்கள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடத்திய பின்னர் இறப்புச்சான்றிதழ் அல்லது காணக் கிடைக்கவில்லை என்ற சான்றிதழ் பத்திரத்தை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காணாமல் போன் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு  கணக்கிடைக்கவில்லை சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் போன உறவினருக்கு குடும்ப வாழ்வுக்காக ஒரு முறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...