சவூதி – இலங்கை இடையிலான 48 வருட உறவு ஒத்துழைப்பின் அடையாளம்!

Date:

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சுமார் 48 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1974 இல் ஆரம்பிக்கப்பட்டன.

அந்த காலப் பகுதியிலிருந்து, இலங்கை – சவூதி இரு நாடுகளும் மிகவும் நட்பு பாராட்டுகின்றது.

சவூதி அரேபியாவில் கிட்டத்தட்ட 300,000 எங்கள் இலங்கைத் தொழிலாளர்கள் தொழில் புரிகின்றனர். இலங்கை சந்தையில் 23ஆவது பெரிய இறக்குமதி பங்காளியாகவும் இலங்கை உள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான மூன்று வருடங்களில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான மொத்த வருடாந்த வர்த்தக பெறுமதி 215 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இலங்கை தேயிலை சவூதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருளாகும். அதற்கமைய கடந்த வருடம் மட்டும் நாம் சவூதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்த இலங்கை தேயிலையின் பெறுமதி 27 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இது சவூதி அரேபியாவுக்கான நமது ஏற்றுமதியில் 36 சதவீதம் ஆகும். நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.

மேலும், சவூதி அரேபியா பல ஆண்டுகளாக நமது நாட்டில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாது, உதவியின் கீழ், சுகாதாரம், கல்வி, நீர் வழங்கல், நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் சாலை அபிவிருத்தித் திட்டங்கள் பல பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

முக்கிய ஏற்றுமதி பொருளான தேயிலைத் தவிர, ஆடைகள், வாழைப்பழங்கள், தேங்காய் மற்றும் மீன், இளநீர், ஆகியவற்றை சவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

அNதுபோல சவூதி அரேபியாவிலிருந்து பிளாஸ்டிக், எரிவாயு, டீசல் எண்ணெய், இரசாயனங்கள், காகிதம், மற்றும் கண்ணாடிப் பொருட்களையும் இறக்குமதி செய்கிறோம்.

அதற்கமைய நமது நாட்டிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே நல்ல வர்த்தக வாய்ப்பு உள்ளது.

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் உதவியுடன் இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவது 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் கடந்த நான்கு தசாப்தங்களாக நாடு பூராகவும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியம் பங்களித்துள்ளது.

இதேவேளை எதிர்கால முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும் அதே வேளையில், சிறு நீர்ப்பாசனம், கிராமப் புற நீர் வழங்கல் மற்றும் கிராமப் புறங்களில் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதிநிதிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அதேபோல தற்போதை இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த சந்திப்பின் ஊடாக பெற்றோல் மற்றும் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படுமா இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பினை பல துறைகளில் விரிவுபடுத்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சவூதி அரேபிய நிதியத்தினூடாக இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டுவருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...