சீதாவாக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார்.
அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.
இதன்போது, ‘சீதாவக்க பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக என்னை நியமித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், நிறைவேற்றுப் பதவியான மேற்கண்ட பதவியில் நீடிப்பது பொருத்தமற்றது என அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்ததார் என்ற குற்றச்சாட்டில் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை ஜனாதிபதி அமைச்சு பதவிகளில் இருந்து அண்மையில் பதவி நீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.