சீனாவிடம் இருந்து இலங்கை மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
70 ஆண்டுகளுக்கு முன்பு சீனா மிகக் குறைந்த புள்ளியில் இருந்தபோது இலங்கை சீனாவுக்கு உதவியதால், இலங்கையின் சூழ்நிலையை சீனா பயன்படுத்திக் கொள்ளாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகவும் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிகளை இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சி. சென்ஹோங் தெரிவித்தார்.
இந்தகோரிக்கை தொடர்பில் சீனா தற்போது பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்தியாவிடம் இருந்து கடன் வசதியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஒரு டீசல் தற்போது தற்போது இலங்கை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.