சீனாவில் மீண்டும் புதியதொரு வகையான வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய வைரஸால் இன்றையதினம் மாத்திரம் சீனாவில் புதிதாக 3,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்திலும் பரவிய இந்த வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு வெகு வேகமாக சரிந்து வருகின்ற நிலையில், கொரோனா வைரஸ் உருவான சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
கடந்த 2 வருடங்களாக குறைந்திருந்த தொற்று தற்போது உயர தொடங்கி இருப் பது அந்த நாட்டு மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஜிலின் மாகாணத்தில் 500இற்கும் அதிகமாமோனர் பாதிக் கப்பட்டுள்ளனர்.
தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து, அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங் களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல் படுத்த உள்ளூர் நிர்வாகங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டு வருகிறது.
அந்த வகையில் கொரோனா பரவல் அதிக முள்ள ஷாங்காய் மாகாணத்தில் உள்ள யூசெங், ஜில்லின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் ஆகிய நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் தற்போது தான் மெல்ல, மெல்ல கொரோனாவில் இருந்து விடுபட்டு பொருளாதாரத்தை மீட்டெடுத்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிதாக பரவ தொடங்கியுள்ள வைரஸ் உலக நாடுகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை சீனாவின் சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.