சென்னை வண்டலூர் பூங்காவில் 13 வயதான பெண் வெள்ளை புலி உயிரிழப்பு!

Date:

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பெண் வெள்ளை புலி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.நேற்றிரவு 13  வயதுடைய ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உடல்நலகுறைவால் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது…

கடந்த 2009ம் ஆண்டு இப்பூங்காவில் பிறந்த இந்த பெண் வெள்ளை புலி கடந்த இரண்டு வாரங்களாக “அட்டாக்சியா” எனப்படும் கை, கால்களில் ஏற்படும் தசை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளை புலி கடந்த இரு தினங்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்து வந்துள்ளது

இதை தொடர்ந்து வெள்ளை புலியை காப்பாற்ற அனைத்து மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி புலி உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களால் புலி பரிசோதனை செய்யப்பட்டது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...