செரண்டிப் நிறுவனம் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது!

Date:

செரண்டிப் நிறுவனம் கோதுமை மாவின் விலையை 1 கிலோவுக்கு 35 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அதற்கமைய இந்த விலை உயர்வு இன்று (11) முதல் அமுலுக்கு வருகிறது.

குறித்த விலை அதிகரிப்பானது இன்றைய தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50சதவீதம் கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அத்தியாவசிப்பொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பது தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

கோதுமை மா சார்ந்த உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு நாளை

உயர் நீதிமன்றின் மூவரடங்கிய விசேட நீதிபதி குழாம் முன்னிலையில் நாளைய தினம்...

2 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜனாதிபதி அனுரவின் ஆட்சி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் (21)...

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. அளவான பலத்த மழை

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...