சேதன பசளையினை பயன்படுத்தி பயிர்செய்கையில் வெற்றிகண்ட 64 ஆவது படைப்பிரிவு!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள 64 ஆவது படைப்பிரிவின் தலைமை வளாகத்தில் சேதன பசளை மூலம் மரக்கறி செய்கையினை மேற்கொண்டு நல்ல விளைச்சலினை எதிர்கொண்டுள்ளதாக படைத்தரப்பு விவசாயிகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த விவசாயிகளை அழைத்தது 64 ஆவது படைத்தரப்பு சேதனை பசளையினை பயன்படுத்தி செய்கை பண்ணிய புடலங்காய், பாகற்காள்,பயிற்றங்காய், முருங்கை போன்ற செய்கைகளின் விளைச்சலினை விவசாயிகளுக்கு காட்டி அது தொடர்பான விளக்கத்தின கொடுத்துள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி நிலயத்தினுடைய பண்ணை முகாமையாளர், கமநல சேவை நிலைய அதிகாரி, விவசாய விரிவாக்கற்பகுதி உத்தியோகத்தர்கள் ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த விவசாயிகள் ஆகியோரை அழைத்த படையினர் தங்களின் சேதனை பசளை பயன்பாடு தொடர்பிலான செய்கைகளை காட்டி விளக்கமளித்துள்ளதுடன் சிறந்த அறுவடையினை தாம்பெற்றுள்ளதை விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக காட்டியுள்ளார்கள்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய சேதன பசளையினை பயன்படுத்தி இவ்வாறான செய்கை மேற்கொண்டுள்ளதாகவும் இவ்வாறு விவசாயிகள் குறிப்பாக மரக்கறி செய்கையாளர்கள் இதில் வெற்றிகாணலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...