ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை சுட்டிக்காட்டியும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
எதிர்க்கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தை அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியே வருமாறு அழைப்பதுடன், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கான பலத்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.