டொலர் இன்மையால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் !

Date:

நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள், துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், டொலர் இன்மையால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சீனி, கோதுமை மா, கடலை, பருப்பு உள்ளிட்ட பல உணவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.

கடந்த காலத்தில் இடைக்கிடையே டொலர் கிடைக்கப்பெற்ற போதிலும், தற்போது வங்கிகளிடமிருந்து டொலர் கிடைக்கப் பெறுவதில்லை என்றும் இறக்குமதியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் டொலருக்கான ரூபாயின் பெறுமதி 230 ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் இருந்து 3,500 மெற்றிக்டன் எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.

இதற்கமைய, எதிர்வரும் சில நாட்களுக்குள் நாட்டில் நிலவும் எரிவாயு பற்றாக்குறை கிரமமாக நீங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...