‘தோல்வியுறும் பசுமைத் தேசம்’ -எம். எல். எம். தௌபிக்

Date:

இலங்கையில் பேரினமைவாத பின்காலனிய அரசியல் ஒழுங்கு எழுபது ஆண்டுகளாக சிங்கள சமூகத்தின் மீது திணித்திருக்கும் சித்தாந்த அடிமைத்துவமும் அதன் வெளிப்பாடாக அவர்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்ட Inferiority Complex, Fear Psychology என்பனவும் சுதேச சமூகங்களை நாட்டின் பிரதான நீரோட்டத்திலிருந்து மெல்ல மெல்ல துருவநிலைப்படுத்தி தற்போது உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம், எழுச்சி சார்ந்த பொது இலக்குகளில் கூட இணைந்து செயலாற்ற முடியாத இறுகிய நிலையும் சமூகங்களிடையே வலுப்பெற்றுள்ளது.

தற்சமயம் பொருளாதாரத்தில் நாடு அடைந்திருக்கும் பின்னடைவு சாதாரணமானதல்ல, அன்மைய வரலாற்றில் எப்போதும் இல்லாதளவுக்கு மக்கள் வாழ்க்கை பலத்த கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு நற்றாற்றில் தத்தளிக்க விடப்பட்டுள்ளது.

அது மலையில் இருந்து மடுவுக்குள் விழுந்த நிலையை விடவும் ஆபத்தானது. மரத்தால் விழுந்தவனை மாடு அல்ல யானை மிதித்த நிலைக்கு மக்கள் வாழ்வை நகர்த்திவிட்டுள்ளதோடு, இலங்கை கடன் பெறத் தகுதியற்ற நாடுகளது பட்டியலின் நுழைவாயிலுக்கு வந்துவிட்டது.

இங்குதான் பேரின மேலாதிக்கவாத அரசியல் ஒழுங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சிங்கள சமூகம் யதார்த்தமாக அதேநேரம் சுதந்திரமாக சிந்தித்து, செயல்பட வேண்டியதன் அவசியமும் அவசரமும் மேலெழுந்திருக்கிறது. உடனடி நிலைமாற்றம் இவ்விடயத்தில் சாத்தியமாகாவிட்டால் நாட்டை சீரழிவிலிருந்து பாதுகாப்பது கடினமானதே!

இப்போது இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் சரிவுகளின் பின்னணியில் அரசுகளின் தோல்வி அல்லது வீழ்ச்சி குறித்த கருத்தாடலின் மீது எமது கவனத்தை குவிக்க வேண்டியிருக்கிறது.

அரசுகளின் தோல்வி.

அரசுகள் தோல்வியடைவற்கான காரண, காரியங்கள் யாவை என்ற கருத்தாடல் சர்வதேச அரசியலின் இயங்கு தன்மையை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் ஒன்றாகும். இக் கருத்தாடலை ஒரிரு விடயப்பரப்புகளுக்குள் சுருக்கிவிட முடியாதளவிற்கு அவை பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன என்பதை அரசியல் அறிஞர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இராண்டு அரசுகளுக்கிடையில் அல்லது தரப்புகளுக்கிடையில் யுத்தம் ஒன்று இடம்பெற்று அதில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதன் மூலமாக எண்ணற்ற உயிர்களையும் உடைமைகளையும் இழந்து பாரிய அழிவுகளை சந்தித்த, போருக்குப் பின்னரான அரசைக் கட்டியெழுப்பும் பணியும் சாத்தியமற்றுப்போன அரசுகளை அல்லது வளங்களுக்கான மோதல், உள்ளக இன- மத முரண்பாடுகள், பஞ்சம், பட்டினி, நிர்வாக சீர்கேடுகள், ஊழல் போன்றவை முற்றிவிட்ட, வெளிநாட்டுக் கடணில் மூழ்கி மீட்சியடைய முடியாமல் சுயத்தை இழந்து போன அரசுகளே பொதுவாக தோல்வியடைந்த அரசுகளாகப் பாக்கப்படுகின்றன.

இவற்றின் மொத்த அறுவடையாக இத்தகைய அரசுகள் தமது ஆள்புல எல்லைகளைக் கூட பாதுகாக்க முடியாது அவற்றை பலமிக்க சக்திகளிடம் அடகு வைத்து தமது இறைமையையும் இழந்து விடுகின்றன.

வெளிப்படையில் தேசிய பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவை வழங்குதல் போன்ற நேர்மறையான அரசியல் நலவுகளைக் கூட தமது பிரஜைகளுக்கு வழங்க முடியாத இயலாமை வெளிப்படுவதிலிருந்து அரசுகளின் தோல்வி உதயமாகிறது எனலாம். இந்த இடத்தில் இன்றைய இலங்கைச் சூழலை ஒப்பு நோக்கிப் பார்த்தால்..

அரசுகள் ஏன் தோல்வியடைகின்றன என்பது குறித்து முன்வைக்கப்படுகின்ற வாதங்களை இரண்டு பிரதான வகைப்பாடுகளுக்குள் கொண்டுவர முடியும்.

முதலாவது வகைப்பாட்டில்

அரசுகளின் ‘வள’ (Resources) இயலுமையையும் இரண்டாவது வகைப்பாட்டில் அரசுகளின் செயற்பாட்டுத் திறன்களையும் மையப்படுத்தி நோக்கலாம்.

வளப் பற்றாக்குறையும் வளத்தைப் பெறுவதற்கான போராட்டமும் இனங்களுக்கிடையில், சமூகங்களுக்கிடையில், வேறுபட்ட சமூக, அரசியல் குழுக்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தி நாட்டை முரண்பாட்டு வலயத்தில் தள்ளிவிடுகின்றன. மறுபக்கமாக ‘வள மிகுதி’ முறையான, பக்கச்சார்பற்ற முகாமைத்துவமின்மையால் ஊழல், மோசடிகளுக்கு வழியேற்படுத்தி விடுகின்றன.

வளம் எனக் குறிப்பிடுகின்ற போது ஒரு அரசிலுள்ள இயற்கை, சூழல் – சுற்றாடல், கனிம, நீர் மற்றும் மனித வளங்கள் என அனைத்தையும் உள்ளடக்கின்றன.

ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் தேசிய ரீதியிலும் உள்ளுர் மட்டத்திலும் தமது அடிவருடிகளான கட்சிக்கார்களை முக்கிய பதவிகளில் அமர்த்திவிடுவதனால், ஆட்சி புரிதல் செயல்முறை பலவீனப்பட்டு விடுவதோடு மனித வள விரயத்தினால் ஒட்டு மொத்த அரச இயந்திரமும் செயற்திறனை இழந்து, முறைகேடுகளும் பாரிய குற்றச்செயல்களும் வள, அதிகார துஷ்பியோகங்களும் தலைதூக்கி அரசின் செயற்பாட்டுத் தளம் சீர்குலைந்து விடுகிறது.

இந்நிலையில் ஆட்சியாளர்களும் ஆதிக்க வர்க்கமும் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி வன்முறைகள், கலவரங்கள், மத – இன வெறித்தனம் என்பன மூலம் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்கின்றன.

இலங்கையின் காலனித்துவ விடுதலைக்குப் பின்னரான ஏழு தசாப்தகால நகர்வை, பயணத்தை பகுப்பாய்வுக்கு உற்படுத்துகின்ற போது அது திட்டமிட்ட அடிப்படையில் தோல்வியுரும் அரசொன்றின் இலட்சணங்களை நோக்கி வழிநடத்தப்பட்டுள்ளமை தெளிவாகத் தென்படுகின்றது

Popular

More like this
Related

மாணவ குழுக்களுக்கிடையில் முரண்பாடு: பரீட்சை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கிய தாயார்!

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை வளாகத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை...

விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக மனு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்குமாறு...

OL பரீட்சை முடியும் முன்னரே இறக்கை கட்டிய சுதந்திரப் பறவைகள்: இரண்டு மாணவிகள் மாயம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம் பரீட்சை...

உண்மை மற்றும் நல்லிணக்க திட்டம் இலங்கையில் செயற்படுவது அவசியம்: அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு

இலங்கையில் செயற்படும் உண்மை மற்றும் நல்லிணக்க திட்டமொன்று காணப்படுவது அவசியம் என...