(File Photo)
எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு பேரணியொன்றுக்கு தயராகியுள்ளது.
அதேநேரம், இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி செல்லவுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையம் மற்றும் கொழும்பு பொது நூலகத்திற்கு முன்பாக பிற்பகல் 1 மணிக்கு பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து பலர் இன்று கொழும்புக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த பேரணி இடம்பெறவுள்ளது.
‘நாடு நாசம்- நாட்டைக் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதுடன் இதில் நாடு முழுவதும் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் தொடர்பாகவும் இந்த போராட்டத்தில் முக்கியத்துவமளிக்கப்படுகின்றது.
அதேநேரம், குறித்த போராட்டம் அரசாங்கத்தை வீட்டுகு அனுப்பும் போராட்டமாக இருக்கவேண்டும் என்றும் இதில் கட்சிப்பேதமின்றி கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடத்தை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.