எதிர்வரும் வாரம் மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாத காரணத்தினால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்காததால் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையம் அதன் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
அதேநேரம், டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அனல் மின்நிலையங்களுக்கு போதுமான எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே தினசரி 6 மணி நேரம் மின்சாரம் தடைபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.