பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மார்ச் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் வாரம் மார்ச் 22 முதல் மார்ச் 25 வரை நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளை கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.