பல முக்கிய கட்சிகளின் பங்கேற்பின்றி சர்வ கட்சி மாநாடு ஆரம்பம்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 27 அரசியல் கட்சிகளுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி ஆகியன மேற்படி மாநாட்டைப் புறக்கணித்துள்ளன.

மேலும், பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஒன்றிணைந்து மன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளன.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண மற்றும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட அரசாங்கத்துடன் இணைந்துள்ள 11 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அத்துரலியே இரத்தின தேரர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமாமஜக்கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மாநாட்டில் பங்கேற்றுள்ளன.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக சொத்துக்கள் சேதம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகள் ஏற்படுத்திய மோதல் காரணமாக, நீர்கொழும்பு...

காசா குழந்தைகளின் கல்விக்காக ஸ்வீடன் பில்லியனர் ரோஜர் அகெலியஸ் சுமார் $76 மில்லியன் நிதியுதவி.

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதி குழந்தைகளின் கல்வித் தேவைகளை மறுசீரமைப்பதற்காக,...

டெங்கு பரவலால் கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் Online-இல்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் டெங்கு பரவல் காரணமாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும்...