‘பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை’ : ரணில் விக்கிரமசிங்க

Date:

நாட்டின் பிரதமராக தொடர்ந்து சேவையாற்றுவேன் தற்போதைய நிலையில் பதவி விலக மாட்டேன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் பதவியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதாக வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகைளிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

மேலும் எனக்கு இன்னும் காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் பற்றிய ஊகங்கள் அனைத்தும் பொய் என்றும் மகிந்த இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவுடனோ அல்லது சஜித்துடனோ தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

அதேபோன்று, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் தனது கட்சியான ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் பிரச்சினைகள் காணப்பட்டாலும், அந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் என்ற விதத்தில் தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் கூறுகின்றார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்க இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

பிரதமராக பதவியேற்குமாறு தனக்கு இதுவரையில் எந்த வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாhர நெருக்கடி நிலைமைகளில் சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில், மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகி ரணிலை அந்தப்பதவியை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இது தொடர்பில் தனக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை அந்தப் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய எந்தவொரு அவசியமும் எனக்கில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...