பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க விரும்பவில்லை: எரிசக்தி அமைச்சர்

Date:

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு , இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது .

இதற்கிடையில், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மக்கள் வரிசையில் நிற்கும் நிலை தொடர்கின்றது . இதேவேளை ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே விளக்கமளிக்கையில்,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகள் தற்போதைய நிலையில் அதிகரிக்கப்படாது என தெரிவித்துள்ளார் .

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு , இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது .

இதற்கிடையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மக்கள் வரிசையில் நிற்கும் நிலை தொடர்வதுடன் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே விளக்கமளிக்கையில்,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய எண்ணெயின் துணை நிறுவனமான லங்கா ஐ.ஓ.சி, இந்த ஆண்டில் மட்டும் நான்காவது முறையாக அனைத்து வகை பெற்றோல்களின் விலையை உயர்த்தியதையடுத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் டொலர் நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வினால் ஏற்பட்ட தேவையற்ற நிலைமைகள் காரணமாக பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளதுடன்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...