பேரீச்சம்பழ இறக்குமதிக்கான 200 ரூபா விசேட தீர்வை வரியை 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1 ரூபாவாக நிர்ணயம் – நிதியமைச்சு விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (மார்ச் 28) முதல் அமுலுக்கு வருகிறது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு நிவாரணமாக வரி 199 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.