இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவுக்குஅமைய மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் இந்த செய்திகளை மறுத்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் தான் மிகுந்த. நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க தமக்கு பலமாக இருக்கின்றார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஆளுநர் கப்ராலை இராஜினாமா செய்யுமாறு கூறியதாக வெளியான செய்தியில் முற்றிலும் உண்மை இல்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாக கூற விரும்புகிறோம்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அத்தகைய நிபந்தனையை விதித்ததாக செய்தி அறிக்கை முற்றிலும் தவறானது.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் பற்றி விவாதிக்கவில்லை மற்றும் குறித்த அதிகாரின் சந்திப்பில் பண விவகாரங்களை மட்டுமே கலந்தாலோசித்தோம்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் ஆளுநர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர் மற்றும் அவரது இராஜினாமாவை கோருவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போலியான செய்திகளால் சோர்வடைய வேண்டாம் என்றும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான அவரது அனைத்து முக்கிய பணிகளைத் தொடருமாறும் ஆளுநர் கப்ராலை தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பிழையான செய்திகளை திருத்திக் கொள்ளுமாறும், எதிர்காலத்தில் இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட, ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் குறித்த பத்திரிகைக்கு வலியுறுத்தியுள்ளது.