மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம், இது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் – காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 1 மணி நேரம் மாலை 4:30 முதல் இரவு 9:30 வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின் வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் A,B,C,D,E,F,G,H,,I,J,,K, L வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மணிநேரம் 30 நிமிடங்கள் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின் தடை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.