மின் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு: இராஜாங்க அமைச்சர் தயாசிறி

Date:

இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் பிரகாரம் மின்சார கட்டணத்தை 500 வீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ‘பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின்விளக்குகளையும் மற்றும் மின்விசிறிகளை உட்கார்ந்து பார்க்க வேண்டும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். அத்தகைய நிலைக்கு நாடு வீழ்ந்துள்ளது, எனக்குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களாக நாட்டைப் பீடித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவும் மோதல்களின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னதாக தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமிருந்து பெறப்பட்ட தேவையான தரவுகளை மதிப்பாய்வு செய்த பின்னரே விலை உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மறுஆய்வு செயல்முறைக்கு நீண்ட காலம் தேவைப்படும் என்று ஆணையம் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...