யுக்ரேன் மீது தாக்குதல் தொடுக்க புடினை தூண்டியது அமெரிக்காவின் செயற்பாடுகளா?- லத்தீப் பாரூக்

Date:

அமெரிக்காவின் தந்திரத்தால் யுக்ரேன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தூண்டப்படடாரா? குவைத் மீது படையெடுக்க சதாம் ஹுஸேன் எவ்வாறு அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டாரோ அதேபோல் யுக்ரேன் மீது படையெடுக்க, ஏற்கனவே சிரியாவில் உள்ள முஸ்லிம்களின் இரத்தக்கரை படிந்த கரங்களுடன் காணப்படும் ரஷ்ய ஜனாதிபதியும் புடினும் தூண்டிவிடப்பட்டாரா?.

சதாமின் குவைத் படையெடுப்பு எப்படி வளைகுடா போருக்கு வழிவகுத்ததோ ஆயுத உற்பத்தித் துறை கூட்டாண்மை நிறுவனங்கள் செழித்தோங்க அது எவ்வாறு வழியமைத்ததோ அதேபோல் ஒரு நிலைமையை உருவாக்கும் அமெரிக்க சதியின் ஒரு அங்கம் தான் யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பா?

சுதந்திர ஊடகவியலாளர்கள், வரலாற்றியலாளர்கள், அரசியல் விமர்சகர்கள் ஆகியோரிடம் தற்போது எழுந்துள்ள கேள்விகள் இவைதான். அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் செயற்பாடுகள் தான் புடினை யுத்தத்துக்கு தூண்டி விட்டுள்ளன என்பதே இவர்களின் கருத்தாகவும் உள்ளது.

நேட்டோ அமைப்புக்குள் நாம் யுக்ரேனை ஒருபோதும் சேர்த்துக் கொள்ள மாட்டோம், அத்தோடு யுக்ரேனின் ரஷ்ய எல்லைப் பகுதியில் நவீன ஆயுதங்களையும் குவிக்க மாட்டோம் என்ற உறுதியை அமெரிக்க ஜனாதிபதி ஜோய் பைடன் அளித்திருந்தால் புடின் யுக்ரேனை ஆக்கிரமித்திருக்க மாட்டார்.

ஆனால் ரஷ்யா யுத்தத்துக்கு தயாரான நிலையில் கூட அமெரிக்கா இந்த உத்தரவாதத்தை வழங்கவே இல்லை.

பைடனால் இத்தகைய உத்தரவாதத்தை வழங்கவே முடியாது. காரணம் அமெரிக்க ஐரோப்பிய இராணுவ ஆயத உற்பத்திக் கூட்டாண்மை நிர்வாகங்கள் தான் அமெரிக்காவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன.

அங்கு அரசியலில் யார் இருக்க வேண்டும் யார் யார்? என்னென்ன பதவிகளில் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிப்பவர்கள் இந்த கூட்டண்மை நிறுவனங்கள் தான். அதற்கேற்றவாறு அவர்கள் வெகுசன ஊடகங்களையும் தவறான வழிகளில் தமக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வருகின்றனர்.

நேட்டோவும் அதன் ஏனைய உறுப்பு நாடுகளும் யுக்ரேனில் தாங்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக உரிமை கோரினர். ஆனால் அந்த நாடோ இஸ்ரேலிய யூத ஆதரவு சக்திகளால் குருட்டுத்தனமாக நிர்வகிக்கப்படும் ஒரு நாடு.

அங்குள்ள 44.13 மில்லியன் சனத்தொகையில் 1.4 மில்லியன் பேர் யூதர்கள். ஆனால் யுக்ரேன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் அரைவாசிப் பேர் யூதர்கள்.

யுக்ரேன் அரசு அங்குள்ள சதந்திர தொலைக்காட்சி நிலையங்களை மூடிவிட்டதாகவும், சுதந்திர ஊடகவியலாளர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் அவர்களில் பலர் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்தள்ளதாகவும், எதிர்க்கட்சியினரை நசுக்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுக்ரேனுக்குள் ரஷ்யப் படைகள் பிரவேசித்ததும் நேட்டோ துரித நடவடிக்கைகளில் இறங்கியது. ரஷ்யா மீது அவர்கள் கடுமையான தடைகளைக் கொண்டு வந்தனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானம் முன் வைக்கப்பட்டது.

அதில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவிக்கப்பட்டதே தவிர ரஷ்யா கண்டிக்கப்படவில்லை.

ஐரோப்பிய பாராளுமன்றம் கூடி யுக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்தது. நெதர்லாந்தின் ஹேக் நகரில் நிலைகொண்டுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (CIA) புடினின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடங்கியது.

இவை எல்லாமே ஒரு வாரத்தில் நடந்தன. ஆனால் இந்த மனித உரிமை காவலர்கள் பல தசாப்தங்களாக பலஸ்தீன பூமியை ஆக்கிரமித்து அங்கு தினசரி அநியாயங்களும் அட்டுழியங்களும் புரிந்து மனித உரிமைகளை நாள்தோறும் மீறி வரும் இஸ்ரேல் விடயத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் உலகின் நடுநிலை சிந்தனை கொண்ட மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ள கேள்வி.

‘மேற்குலகம் யுக்ரேனை ஆதரிப்பது சரியே ஆனால் அது பலஸ்தீனத்தின் மீதான கொடுமையான ஆக்கிரமிப்பை அலட்சியம் செய்கின்றது’ என்று தலைப்பிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில் இந்த இரட்டை வேடம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2022 மார்ச் 1ல் சர்வதேச ஊடகம் ஒன்றில் பிரபல பத்தி எழுத்தாளர் கலாநிதி கிடியோன் பொல்வா என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பும் பலஸ்தீனத்தின் மீதான இனவெறி கொண்ட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆகிய இரண்டுமே தவறானவை. சர்வதேச சட்டங்களை அவை மீறுகின்றன. பாரிய அழிவுகளையும் அவை ஏற்படுத்தி உள்ளன.

ஆனால் இனவாத போக்கு கொண்ட குறிப்பாக அரபு எதிர்ப்பு மற்றும் சமய எதிர்ப்பு போக்கு கொண்ட மேற்குலகம் (ஆங்கிலோ, நேட்டோ மற்றும் ஐரோப்பிய பிரிவுகள்) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முற்றாகக் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளன.

பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனஒழிப்பு விடயத்தில் அவை பராமுகமாக உள்ளன. ஆனால் யுக்ரேன் அக்கிரமிப்பு விடயத்தில் ரஷ்யாவை மட்டும் அவை மிகச் சரியாகச் சாடி உள்ளன.

இஸ்ரேலின் இனவாத ஆக்கிரமிப்பு பலஸ்தீனத்தில் அது மேற்கொண்டு வரும் இனச் சுத்திகரிப்பு மற்றும் அதனோடு தொடர்புடையதாக ஏற்படுத்தப்பட்டு வரும் அழிவுகள் ஆகிய விடயங்களில் மேற்குலகம் முற்றாக மௌனம் காக்கின்றது.

மேற்குலகின் இந்த அருவருப்பான இரட்டை வேடம் அது கூறி வரும் பொய்கள் இனவாதம் என்பன இன்னும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலைத்தேச நாடுகளின் இந்த நயவஞ்சகத் தனத்துக்கும், பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் அத்து மீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு என்பனவற்றில் அது காட்டி வரும் கடுமையான மௌனம் என்பனவற்றுக்கு குறிப்பிடத்தக்க ஒரு விதிவிலக்காக பிரிட்டனின் மத்திய சண்டர்லேண்ட் பிரதேச தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜுலி எலியட் தெரிவித்துள்ள கருத்து அமைந்துள்ளது.

அவர் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசும் போது ‘யுக்ரேன் மக்களைப் பற்றி எனது உள்ளம் கவலை கொண்டுள்ளது.

சர்வதேச சட்டங்கள் பற்றி நாம் பேசுகின்றோம் அது சரியானதே. உண்மையில் வெளியுறவு அமைச்சர் அமன்தா மில்லிங்கின் கூற்றை நான் சில நிமிடங்களுக்கு முன் செவியுற்றேன். இறையாண்மை உள்ள நாடுகளின் முக்கியத்துவம் பற்றி அதில் கூறப்பட்டது.

இருப்பினும் பலஸ்தீனர்கள் அதை செவியுற்றால் அவர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்.

இந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் சில நிமிடங்களுக்கு முன் பேசிய சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றி தான் நானும் பேசுகின்றேன் யுக்ரேனில் எவ்வாறு சர்வதேச சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமோ அவ்வாறு தான் அது பலஸ்தீனத்திலும் பின்பற்றப்பட வேண்டும்.

பலஸ்தீனத்தின் மேற்குக் கரை பிரதேசத்தில் இஸ்ரேல் சட்ட விரோதமாக நிறுவி வரும் குடியிருப்புத் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் என இந்த இடத்தில் நான் கோரிக்கை முன் வைக்கின்றேன். அது அங்கே முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.

இந்த முரண்பாட்டுக்கான இரு நாட்டு தீர்வின் ஒரு பகுதியாக பலஸ்தீனத்தை பிரிட்டன் அங்கீகரிப்பதே அது மேற்கொள்ளக் கூடிய குறைந்த பட்ச நடவடிக்கையாக இருக்க முடியும்’ என்று அவர் கூறினார்.

ஜுலி எலியட்டின் மனித உரிமைகளுக்கான இதுபோன்ற குரல்களும், பலஸ்தீனர்களின் சமத்துவமும் இனவாத போக்குள்ள இஸ்ரேலின் சியோனிஸ வக்கிரத்தின் கீழ் வலுவிழந்து நீண்ட நாற்கள் ஆகின்றன. பிரிட்டனின் பிரதிநிதிகள் சபையிலும் அதே நிலைதான்.

இது உடனடியாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வெளிப்பட்டது. ஜுலி எலியட் உடனடியாக கண்டனத்துக்கு ஆளானார். வெறுமனே பொய்யான கணிப்பீடுகளை அவர் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. வரலாற்று ரீதியாகவும் உண்மைகளின் அடிப்படையிலும் தார்மீக ரீதியாகவும் அவருடைய கருத்துக்கள் தவறானவை என்று கண்டனங்கள் அங்கு எழுந்தன.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை பலஸ்தீனத்தில் உள்ள நிலைமைகளோடு ஒப்பிடக் கூடாது அவ்வாறு ஒப்பிடவும் முடியாது என்று எதிர்க் குரல்கள் ஒலித்தன.

ஒரு அறையில் இருக்கின்ற யானையை மேலைத்தேசத்தின் இழிவு மிக்க பிரதான பிரிவு ஊடகங்கள் அவற்றின் ஊடகவியலாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் கல்விமான்கள் மற்றும் வர்ணனை விபசாரிகள் ஆகியோர் எந்த விதமான தயக்கமும் இன்றி அலட்சியப்படுத்தி வருவது போல் தான் இது உள்ளது.

யானை போன்ற அந்த உண்மை எதுவெனில் பிரிட்டனும் பலஸ்தீனமும் சேர்ந்து பலஸ்தீனத்தில் புரிந்து வருகின்ற இன ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ள நாடுதான் யுக்ரேன்.

தற்போது பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் ஆக்கிரமிப்பு, பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் இனஒழிப்பு ஆகிய அனைத்து விடயங்களிலும் இஸ்ரேலுடன் யுக்ரேனுக்கு இறுக்கமான தொடர்புகள் உள்ளன.

பிரிட்டனால் கைப்பற்றப்பட்டு ஆளப்பட்ட பலஸ்தீனத்தில் அஷ்கெனாசி பிரிவு (ஐரோப்பிய வம்சாவழி யூதர்கள்) நடத்தி வரும் காலணித்துவ குடியேற்றங்கள் 1948ல் முதலாவது உலக மகா யுத்தத்தின் முடிவடையும் கட்டத்தில் இருந்தே பிரிட்டனின் ஆதரவைப் பெற்று வந்துள்ளது.

1948ல் யூதர்கள் பலஸ்தீனத்தின் 78 வீத நிலப்பரப்பை கைப்பற்றி அங்கிருந்து சுமார் எட்டு லட்சம் பலஸ்தீன சுதேசி மக்களை பலவந்தமாக வெளியேற்றினர்.

1967ல் இனவாத இஸ்ரேல் (இப்போது அணுசக்தி வளம் கொண்ட) பலஸ்தீனத்தின் எஞ்சிய எல்லா பகுதிகளையும் கைப்பற்றி அங்கிருந்தவர்களை அடித்துத் துறத்தியது.

அப்போது மேலும் நான்கு லட்சம் அரபிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த அஷ்கெனாசி யூதர்களின் 1200 வருட பழமையான கிழக்கு ஐரோப்பிய தாயகத்தின் மத்திய பூமியாக இருந்த இடம் யுக்ரேன் என்பதை மறந்து விடக் கூடாது.

1990ல் ஈராக்கில் இருந்த அமெரிக்கத் தூதுவர் சதாம் ஹுஸேன் குவைத் மீது படையெடுக்க பச்சைக் கொடி காட்டினார். வளைகுடா மீதான ஒரு தாக்குதல் திட்டத்தை வைத்துக் கொண்டு அதற்கு ஒரு காரணத்தை உருவாக்கும் வகையிலேயே சதாம் ஹுஸேன் அமெரிக்காவால் தூண்டப்பட்டார்.

அதன் பிறகு ஈராக் தன்வசம் பாரிய அழிவு தரும் ஆயுதங்களை வைத்திருப்பதாக தமது உளவு சேவையான ஊஐயு மூலம் பொய் கூற வைத்தனர். அதன் தொடராக ஈராக் மீது தடைகள் விதிக்கப்பட்டதோடு படையெடுப்பு நடத்தி ஆக்கிரமித்து குண்டு மழையும் பொழிந்து அந்த நாட்டையே நாசமாக்கினர்.

ஈராக்கின் உள் கட்டமைப்புக்கு பாரிய நாசம் விளைவிக்கப்பட்டது. வளைகுடா மீதான தடைகளின் விளைவாக 1990 முதல் 2003 வரை 1.9 மில்லியன் மரணங்கள், அமெரிக்க கூட்டணியின் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக 2003 முதல் 2011 வரை 2.7 மில்லியன் மரணங்கள், 2011 க்குப் பிறகு 2021 வரை நான்கு லட்சம் தவிர்க்க முடியாத மரணங்கள் பதிவாகி உள்ளதோடு இன்னமும் இவை தொடருகின்றன.

கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க மற்றும் நேட்டோவின் பல தசாப்த கால விரிவாக்கத்துக்கு புடின் வழங்கும் பதிலடியாக கூட இன்றைய நிலை இருக்கலாம்.

அமெரிக்கா, அமெரிக்க கூட்டணி, ஐரோப்பா, நேட்டோ என்பனவற்றில் இருந்து அவர் எதிர்நோக்கிய தடைகள் காரணமாக இந்தப் படையெடுப்பு அவரைப் பொறுத்தமட்டில் பெறுமதி மிக்கதாகக் கூட அமையலாம் என்று கூட புடின் நம்பியிருக்கலாம்.

எவ்வாறேனும் ரஷ்ய பொரளாதாரத்தை நிலைகுலைய செய்ததும், உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து ரஷ்யாவை விலக்கி வைத்ததும் அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றிகள் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

உக்ரேன் மீதான படையெடுப்பின் காரணமாக மேற்குலக நாடுகளால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் அந்த நாட்டின் மீது காட்டப்பட்ட கோபம் என்பன மற்ற நாடுகள் மீது படையெடுப்புக்களை நடத்தும், நாடுகள் மீதும் அண்டை நாடுகள் மற்றும் அவற்றின் மக்கள் மீதும் வன்முறைகளைப் பிரயோகிக்கும, ஆக்கிரமிப்புக்களை நடத்தும் எல்லா நாடுகள் மீதும் பிரயோகிக்கப்பட வேண்டும்.

உலக நாடுகள் பலவற்றின் மீது தொடராக ஆக்கிரமிப்புக்களை நடத்தி வரும் அணு ஆயுத பயங்கரவாதியான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இனவாத இஸ்ரேல் என்பனவற்றுக்கும் இதில் இருந்து விலக்களிக்கக் கூடாது.

இந்த விடயத்தில் நாகரிகமான மக்கள் என்ன செய்யலாம்?

1. உலகம் முழுவதும் உள்ள சமாதானத்துக்கு ஆதரவான சமாதானத்தை நேசிக்கின்ற மக்கள் இந்த பயங்கரமான சம்பவங்கள் பற்றி தாம் அறிந்த எல்லாவற்றையும் தமக்கு தெரிந்த எல்லோரிடமும் எடுத்துக் கூற வேண்டும்.

(அமெரிக்க மற்றும் மேற்குலக ஆதரவுடன் செயற்படும் பிரதான பிரிவு ஊடகங்களின் கீழ்த்தரமான ஆசிரியர்கள், ஊடகவிலாளர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், விபசார வர்ணனையாளர்கள் நிச்சயம் இதை செய்ய மாட்டார்கள்)

2. ஏனைய நாடுகள் மீது ஆக்கிரமிப்புக்களை நடத்தும் மற்ற நாடுகளை அச்சுறுத்தும், அழிவுகளை ஏற்படுத்தும் எல்லா நாடுகளுக்கும் எதிராக பகிஷ்கரிப்புக்கள், விலக்கள்கள், தடைகள் என்பனவற்றுக்கு கோரிக்கை விடுப்பதோடு அவற்றை பிரயோகிக்கவும் வேண்டும்.

(முற்றும்)

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...