ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் தற்போது அந்த பதவியை வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீP லங்கா பொதுஜன பெரமுன தெளிவுபடுத்திய போதே அவர் இதனை கூறினார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குமளவிற்கு தமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது என நினைப்பதாக கூறியுள்ளார்.
நேற்றையதினம் சிங்கள நாளிதழ் ஒன்றில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவிருப்பதாக வெளியான செய்தியினையடுத்து இந்த செய்தி சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.