உக்ரைனுக்கு எதிராக போரை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு கடுமையான பரிசை வழங்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்கி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ரஷ்யாவுடனான அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைனியர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.
அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் தொடர்பு கொண்டு பேசுங்கள், ரஷ்ய சந்தையை விட்டு வெளியேறி வணிகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கனடா நாட்டு பாராளுமன்றத்தில் காணொளி மூலம் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, உக்ரைனுக்கு கனடா அளித்த மனிதாபிமானம் மற்றும் இராணுவ உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும், உக்ரைன் வான் எல்லையை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்க கனடா உதவ வேண்டும்” நாடு முழுவதும் பொது மக்கள் பலியாகி வருகிறார்கள். நீங்கள் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு வருகிறீர்கள்.
அதுமட்டுமில்லாது, உக்ரைனுக்கு எதிராக போரை நடத்தி வரும் ரஷ்யாவுடன் அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை மீது ரஷ்யா கடந்த 24ஆம் திகதி தொடங்கிய போர் இன்று 21ஆவது நாளாக நீடித்து வருகிறது.
உக்ரைனை சுற்றியுள்ள எல்லைகளில் இருந்து ரஷ்ய படைகள் அந்நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதுடன் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.
தற்போது குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.