2019- 2020 ஆம் ஆண்டுகளுக்கான அதிஉயர் ஊடக விருதுகள்: ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான விருதை பெற்றார் ஜாவித் யூசுப்

Date:

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய ஊடக அதியுயர் விருது வழங்கும் விழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இந்த விருது விழா நிகழ்வு கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான விசேட நிலைமைகளில் செய்தித் தேடலுக்கான பேராசிரியர் கைலாசபதி நினைவு விருதினை விடிவெள்ளி பத்திரிகையின் சுயாதீன ஊடகவியலாளர் ஏ.எம். றிப்தி அலி பெற்றுக்கொண்டார்.

அத்துடன் 2020 ஆம் ஆண்­டுக்கான சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான சிறப்புச் சான்றிதழ் விருதினை விடிவெள்ளி பத்திரிகையின் பக்க வடிவமைப்பு அணி சார்பில் செ. கலைச்செல்வி பெற்றுக் கொண்டார். இதே விருதினை சண்டே டைம்ஸ் பத்திரிகையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்மும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து வருடாந்தம் நடாத்தும் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாக்களில் கடந்த காலங்களிலும் விடிவெள்ளி பல விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை வீரகேசரி பத்திரிகையின் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளருக்கான விருது மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவரண கட்டுரைக்கான விருது ரொபர்ட் அண்டனிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினக்குரல் பத்திரிகை பாத்திமா ஹுஸ்னா, பிரசன்ன குமார், தர்மராஜ் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வாழ்நாள் சாதனையாளர்களாக திருமதி புஷ்பா ரேவெல், உபாலி பொன்சேகா, டிபி விக்கிரமசிங்க, திருமதி சமன் சந்திரநாத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அபோபோன்று சிலுமின பத்திரிகை சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஹர்ஷா சுகததாச, சுரேக்கா இளங்கோன், நிஹால் பி. அபேசிங்க சுபாஷினி ஜயரட்ன தாரக்க விக்கிரமசிங்க மற்றும் டெய்லி நியூஸ் பிரன்ஸ் குணசேகர ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான சேபால குணசேன விருதினை இந்த முறை சட்டத்தரணி ஜாவித் யூசுப் பெற்றுக்கொண்டார்.

ஊடகங்கள் வாயிலாக ஊடக சுதந்திரம் தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதை அடிப்படையாகக் கொண்ட இவ்விருது விழா வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணி சவூதி அரேபியாவுக்காக முன்னாள் தூதுவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...