94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹொலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.
இந்த நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் ‘வில் ஸ்மித்’ தட்டி சென்றுள்ளார். ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை டிரைவ் மை கார் ((Drive my car)) திரைப்படம் வென்றுள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இந்த படத்தை யூசுக் ஹமாகுச்சி (ryusuke hamaguchi) இயக்கியுள்ளார்.
சிறந்த திரைக்கதைக்கான விருது Bellfast படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான விருது CODA படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடலுக்கான விருது ‘நோ டைம் டு டை’ படத்தில் பிரபல பாப் பாடகி பில்லி ஈலிஷ் பாடிய பாடலுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது THE EYES OF TOMMY FAYE படத்திற்காக ஜெசிகா சாஸ்டெய்ன் பெற்றார்.
சிறந்த இயக்குநருக்கான விருது THE POWER OF THE DOG படத்திற்காக ஜேன் கேம்பியன் என்னும் பெண் இயக்குநர் பெற்றார்.
ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.