உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர், கொழும்பிலுள்ள லங்கா IOC நிறுவனத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தனக்கு எரிபொருள் விநியோகம் தொடர்பில் தெளிவூட்டியதாக S.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது TWITTER பக்கத்தினில் பதிவொன்றை பதிவிட்டு, S.ஜெய்சங்கர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தியாவினால் இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதுடன் 500 மில்லியன் டொலர் எரிபொருள் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட பின்னணியிலேயே S.ஜெய்சங்கர் லங்கா IOC நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.