இலங்கை பெட்றோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் அதேவேளையில், IOC பெட்றோல் நிரப்பு நிலையங்களில் பெட்றோல் விலை அதிகரித்துள்ளமையினால் தாம் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக முச்சக்கரவண்டி சாரதிகள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் ஊடகச் செயலாளர் கபில கலபிட்டிகே தெரிவிக்கின்றார்.
பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால் தாம் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும் பெருமளவான நிவாரணங்களை வழங்குவதாக உறுதி வழங்கி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம், இன்று மக்களின் வயிற்றில் அடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான பிரச்சினை தொடருமாக இருந்தால், எதிர்காலத்தில் தாம் மேலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.