அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்!

Date:

சுமார் 1,500 கொள்கலன்கள் பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதாகவும்  மேலும் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் கோதுமை மா, அரிசி, சீனி, கடலை மற்றும் மிளகாய் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக கப்பல்களுக்கு மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதால் பொருட்களின் விலை கிலோவுக்கு 10 முதல் 35 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என குறித்த தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அந்த கொள்கலன்களுக்கான பணத்தை இந்திய ரூபாயில் செலுத்த வேண்டியுள்ளதாகவும் எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதிக்கு முன்னர் கொள்கலன்களை விடுவிக்க எதிர்ப்பார்ப்பதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...

நாட்டின் முதலாவது சர்வதேச மும்மொழி இலக்கிய விழா கொழும்பில் ஆரம்பம்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சஷி தரூர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ள...