இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று புதன்கிழமை இந்திய பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிக்கு இந்திய பிரதமருக்கு நிதி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், மார்ச் 30 ஆம் திகதி இலங்கையால் நடத்தப்படும் பலத் துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை அமைச்சரால் பிரதமர் மோடிக்கு இதன்போது, அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்று முன்னதாக, வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுடன் பசில் கலந்துரையாடினார்.
உடன் அறநிலையத்துறை செயலர் எஸ்.ஆர். ஆட்டிகலையும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும், இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அமைச்சர் ராஜபக்ஷ நேற்று புதுடெல்லி சென்றார்.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மிலிந்த மொரகொடவினால் அமைச்சர் ராஜபக்ஷவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய கடன் வசதியை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் நிதியமைச்சர் சந்திக்கவுள்ளார்.