ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மார்ச் 16 புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் வகையில், அவர் இந்த உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், நாட்டின் நிலவரம் தொடர்பில் அடுத்த வாரத்தில் சர்வகட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.