மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்!

Date:

வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புத்தளத்திலிருந்து நீர்கொழும்பு ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் –  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்க படுகின்றது.

மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலையே காணப்படும்.

கொழும்பு – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்திய கூறுகள் உள்ளது.

காலி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்க படுகின்றது.

யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரானவானிலை காணப்படும்.

கண்டி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்திய கூறுகள் உள்ளது.

நுவரெலியா – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்திய கூறுகள் உள்ளது.

இரத்தினபுரி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்க படுகின்றது.

Popular

More like this
Related

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட...

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை: பதிலடியை தொடங்கிய ஈரான்!

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்-சஜித் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...