மைத்திரிபால சிறிசேனவுக்கு பெஜட் வீதியிலுள்ள வீட்டை வழங்குவதற்கான, அமைச்சரவை முடிவை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது!

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பெஜட் வீதியில் வீடொன்றை வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை இலங்கை உயர்நீதிமன்றம் இன்று (29) இடைநிறுத்தியுள்ளது.

இந்த வீடுகள் கொழும்பு மஹாகமசேகர மாவத்தையில் அமைந்துள்ளன.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதிவாதிகள் உரிய அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்குவதைத் தடுக்கும் வகையில் மற்றுமொரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று (29) நான்கு வாரங்களின் பின்னர் இந்த தடை அமுலுக்கு வரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மனு மீதான விசாரணை முடியும் வரை இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும்.

முன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சரவை அந்த வீட்டை வழங்கிய விதம் அரசியலமைப்புக்கு முரணானது என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

மைத்திரிபால சிறிசேனா தற்போது பயன்படுத்தும் வீட்டை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிப்பது மற்றும் அதற்கான செலவுகளை ஈடுகட்டுவது என்ற அமைச்சரவையின் முடிவை குறித்த மனுவில் சவாலுக்குட்படுத்தியுள்ளது.

மஹகம சேகர மாவத்தையில் (சிலரால் பேஜெட் வீதி என்றும் குறிப்பிடப்படுகிறது) சிறிசேன ஆக்கிரமித்துள்ள வாசஸ்தலமானது 180 மில்லியன் ரூபா பெறுமதி உடையது எனவும் அது நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்து எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...