வேலை நிறுத்தத்தை கைவிட்டது தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்!

Date:

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி (பவுசர்) உரிமையாளர்கள் சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு இன்று முதல் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

அதற்கமைய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததை அடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் 14 முதல் 17 சம்பள உயர்வுக்கு அமைச்சர் இணங்கியதாகவும், ஜனவரி முதல் நிலுவைத் தொகையை மார்ச் 25இற்;கு முன்னர் செலுத்துமாறும் அறிவுறுத்தியதாக சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பொறுப்பான அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தவுடன், ஏப்ரல் 1 முதல் மீதமுள்ள ஊதியத்தை செலுத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்திற்கான போக்குவரத்து கட்டணத்தை 60 சதவீதமாக அதிகரிக்குமாறு தாங்கி உரிமையாளர் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு உரிய அதிகாரிகள் பதிலளிக்காததால் தங்களது கடமையில் இருந்து விலகியிருந்தனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பினால் போக்குவரத்து செலவுகள் 60சதவீதமாக அதிகரிப்பதைக் கணக்கிடும் வகையில் எரிபொருள் போக்குவரத்து சூத்திரம் திருத்தப்பட வேண்டுமென சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் அதிகரிப்பு போன்ற பல காரணங்களால் போக்குவரத்து கட்டணத்தை 60 வீதத்தால் அதிகரிக்குமாறு தொழிற்சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இதன்படி எரிபொருள் விநியோகத்திற்காக சுமார் 800 தனியார் டேங்கர்களைப் பயன் படுத்துகிறது.

முன்னதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்திற்கான போக்குவரத்துக் கட்டணங்களை 60சதவீதமாக அதிகரிப்பதாகச் சங்கம் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...