அண்மையில் அரசாங்கத்தைவிட்டு வெளியேறிய தயாசிறி ஜயசேகர, உதய கம்மன்பில, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளது.
இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது நாட்டின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை மக்களுடன் இணைந்து நிற்பதற்காக இந்திய மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியத் தூதுவர் மற்றும் சுயேட்சை எம்.பி.க்கள் இலங்கையின்; தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்து தங்கள் எதிர்கால முன்னோக்கைப் பகிர்ந்து கொண்டனர்.