சமையல் எரிவாயுவின் விலையை அதிகக்க வாய்ப்பு: அமைச்சர் ரமேஷ் பத்திரன!

Date:

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று (26) முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இதன்படி, கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

செலவு அதிகரிப்பு காரணமாகவும் நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் அந்நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதற்கமைய, சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

மேலும் எரிவாயு இறக்குமதி மற்றும் ஏனைய செலவுகள் தொடர்பிலான அறிக்கைகள் ஆராயப்பட்டு இன்று தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...