உக்ரைன் ரஷ்யா போர்: 3 ஆம் உலக போர் நடக்கும் அபாயம்!

Date:

உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் 3ஆம் உலக போர் நடக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் செர்ஜி லாவ்ராவ், நல்லெண்ணம் என்பதற்கு ஒரு அளவு இருப்பதாகவும், எதிர் தரப்பில் இருந்து அதற்கான பிரதிபலன் இல்லையெனில் பேச்சுவார்த்தைக்கு அது உதவாது என தெரிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்த லாவ்ராவ், அவரது பேச்சில் பல முரண்பாடுகள் உள்ளதாகவும் , அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதை போல நடிக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், 3ஆம் உலக போர் என்ற அபாய சூழல் உருவாவதை குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்த அவர், உக்ரைன் உடனான பிரச்னை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வரும் என தான் நம்புவதாக கூறினார்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...