சாய்ந்தமருது குண்டுவெடிப்பு – சடலங்களைத் தோண்டி எடுக்க உத்தரவு!

Date:

கல்முனை- சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி நாளை (27) காலை அம்பாறை பொது மயானத்தில் மரபணு DNA பரிசோதனைக்காக குறித்த உடல் சடலங்கள் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பெரியவர்கள், சிறுவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுல் கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் என்றழைக்கப்படும் சாரா ஜாஸ்மினின் உடல் உறுப்புகள் DNA பரிசோதனையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனால் உடல் உறுப்புகளை மீண்டும் ஆய்வு செய்ய விசாரணை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதனடிப்படையில் கல்முனை நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...