நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை!

Date:

நாட்டில் இடம்பெறும் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டங்களின் போது, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அந்த சம்பவங்களின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த பிறகே மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நேற்றைய தினம் இடம்பெற்ற பல போராட்டங்களில் தீ வைப்பு, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியமை, பாதுக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் உள்நுழைந்தமை போன்ற பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களுக்கு உரிமை இருந்தாலும் அவர்கள் கட்டுக்கடங்காத வகையில் நடந்துகொள்ள முடியாது என்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப்பிரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...