புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்!

Date:

புத்தாண்டு தினத்திலும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் பதிவாகியுள்ளன.

தேசிய புத்தாண்டு இன்று காலை 8.41 மணிக்கு உதயமாகிய போதிலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணி முதல் கொம்பனிதெருவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருந்தனர், ஆனால் புத்தாண்டு பிறக்கும் வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் போதியளவு பெற்றோல் இருப்பு வைத்திருப்பதாக உறுதியளித்த போதிலும், வரிசைகள் காணப்படுகின்றன.

இதற்கிடையில், 37,500 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 37,500 மெட்ரிக் தொன் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டிற்கு வரும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது.

கப்பல்கள் வந்தவுடன் எரிபொருள் விநியோகம் விரைவில் தொடங்கும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...