பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறையை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போதும், சர்வதேச நாணய நிதியத்துடனான தனது கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று கூறிய சஜித், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அதற்கான முன்மொழிவை ஏன் முன்வைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், டொலர் தட்டுப்பாடு என்று இந்த நாடு இப்போது நிலங்களை விற்கப் போகிறது. இதுதான் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டா? இந்த அரசாங்கத்திடம் இன்று வரைபடம் ஒரு எதிர்காலத்திட்டம்இல்லை.
அரசாங்க எம்.பி.க்கள் குழு ஜனாதிபதி பதவி விலக வேண்டும். மற்றொரு குழு பிரதமர் பதவி விலக வேண்டும். இதுதானா அரசாங்கத்தின் வழிகாட்டல் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.