இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!

Date:

இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே இலங்கையுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இலங்கையின் சமீபத்திய முடிவு குறித்து இந்திய அரசாங்கம் கவலை தெரிவித்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா ஏற்கனவே 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளதுடன் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருளையும் வழங்கியுள்ளது.

சீனாவை விட இலங்கைக்கு கடன் வழங்குவதில் முன்னணியில் இருக்க இந்திய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...

இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...