கல்முனை- சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நாளை (27) காலை அம்பாறை பொது மயானத்தில் மரபணு DNA பரிசோதனைக்காக குறித்த உடல் சடலங்கள் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனால் உடல் உறுப்புகளை மீண்டும் ஆய்வு செய்ய விசாரணை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதனடிப்படையில் கல்முனை நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.