3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இதுவரைக்கும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று ( சனிக்கிழமை ) காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதுடன் மிரிஹான பெங்கிரிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக இவ்வாறு ஊரடங்கு சட்டம் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.