பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டக்காரர்கள் முன்னேற விடாமல் தடுப்பு வேலிகளை பொலிஸார் அமைத்துள்ளனர். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என சிலர் கோஷம் எழுப்பிய நிலையில் பெருமளவான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் பல்வேறு சிவில் அமைப்புக்களால் நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.