நுகேகொடை- மீரிஹான பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் இடம்பெற்ற கலவரத்தையடுத்து இன்றையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்குச் சென்றுள்ளார்.
நேற்றிரவு பொதுமக்களின் கவனயீர்ப்பு போராட்டத்தில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், இராணுவத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் போராட்டத்தில் காயமடைந்தனர்.
மேலும், மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடக குழுக்களால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் 3000இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், பின்னர் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து கலைந்து சென்றனர்.
போராட்டத்தின் போது காயமடைந்த பொலிஸ், விசேட பொலிஸ் பிரிவு மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.